புரிவதாய் புரிந்தாய்
பின்பு பிரிவதாய் பிரிந்தாய்
கம்பன் கவிதையாய் கவர்ந்தாய்
தெங்கள் நிழலிலும் திளைத்தேன்
மலரே சொரிகின்ற தேனாய்
தேனில் உறைந்திட்ட கனியாய்
கனியில் செய்திட்ட இதழாய்
இதழில் ஊறிய உணர்வாய்
இரு கை உணர்த்திடும் உறவே
நிழலில் கலந்திட்ட நிஜமே
இரவில் கலந்திட்ட நிலவே
முழுதும் உணர்ந்திட்ட உயிரே
எனை தேடி உன்னை உணர்ந்து- உன்
மனம் தேடி எனை இழந்து -நீ
பொய் கோபம் கொள்கையிலும் - என்
உயிர் நோகும் உணர்ந்திடாயோ