உன் மலர் போன்ற விழி நோக்கத் தவகோலம் தனை பூண்டு
மனம் ஏனோ பல நேரம் எனை துறந்து போக நேரும்
உயிர் கூட மெய் நீங்கி உன் கூடு தனை தேடும்
அமிழ்தத்தை தேடயிலே நஞ்சும் தான் தோன்றிடுமாம்
காதல் அதன் பாதையிலே கண்ணீரும் சேர்ந்ததிங்கே
உனக்கெனவே பொறுத்திருப்பேன் உயிர் போகும் வரை காத்திருப்பேன்
போய் முடியும் வேளையிலும் உன் திசையில் சாய்ந்திர்பேன்
விரைவாக வந்திடுவாய் என் வேதனையை தீர்த்திடுவாய்
விடியலென வந்து எந்தன் இரவுக்குள் ஒளி தருவாய்
தூதுக்கும் ஆள் இல்லை சோகம் சொல்ல துணை இல்லை
கணவாய்தான் போய் விடுமோ உன்னோடு நம் வாழ்க்கை
கானல் நீரில் கலந்திடுமோ உன் கரம் சேரும் என் வேட்கை
வசந்த கால பறவைகள் , வான் உரசும் வெண் மேகம்
மண் சேர்ந்த மழை தூறல் , முன் பணியில் புல்வெளிகள்
இவை யாவும் நம் காதல் கதை தன்னை பேசி செல்லும்
மலர் விடுத்து மலர் மனமும் நீங்காமல் நிலைத்திருக்க
கடல் விடுத்து மணல் கரையும் மாறாமல் சேர்ந்திருக்க
எனை மறந்து என்னுயிரே எனை பிரிந்து போவதெங்கே !!!