குழலோசை கேட்டு மதி மயங்கும் வேளை
மலர் வாசம் சேர்ந்து மனம் சரியும் சோலை -கண்ணன்
முகம் தேடி விழியும் வழியதனை நோக்கி
பின்னே காணாத உருவம் கண் முன்னே தோன்றி
மண் மீது சாய்ந்தாள் அவன் மடியென்றே நினைத்து
மனம் மட்டும் எங்கோ நினைவலையில் மிதக்கும் .
குழலதுவா இனிமை ?
குழலான மூங்கிலில் ,
இன்னும் இசையாகும்
காற்றில் கொஞ்சம்
ஈரத்தின் சுவைதான் -அவன்
இதழதுவோ இனிமை -அதில்
இணைவதுவே இனிமை .
ராதை எண்ணத்தில் நிலைத்தான்,
இவள் இன்பத்தில் திளைத்தாள்
இணைவதாய் இணைந்து
கொஞ்சம் பிரிவதாய் பிரிந்து
இவன் செய்யும் லீலை
இவளுள் துன்பத்தின் ஜுவாலை
நித்திரையில் இறைவன்
தோற்றத்தை கண்டு
நகைக்கின்ற கிள்ளை -இவள்
விழித்ததும் காணா உருவத்தை
எண்ணி அழுதிடும் பிள்ளை .
எக்கணமும் நீங்கும்
உயிர் தாங்கி நின்றாள்
அவன் வரவை நோக்கி !
சிக்கனம் ஏனோ
கோகுலத்து கண்ணா
கட்சி தாராயோ !