Tuesday, August 11, 2009

செல்ல நாய் குட்டி

போ என்றே விரட்டினாய்

நாயென்றே வாசலில் நான்

நாயிது போவென்று உரைத்தால் - உன்

நெஞ்சம் தாங்காதென்று

குறைக்கத்தான் சொல்லிக் கொடுத்தான்- இறைவன் என்றும்

மெய்யன்பாய் இருக்கத்தான் பழக்கி வளர்த்தான் !

மண்ணில் மனிதங்கள் செத்த பிறகும்

காயவில்லை இங்கு மண்ணின் ஈரம்

மாறவில்லை செல்ல நாயின் பாசம்

சுற்றி ஓய்ந்த பிறகும்

எட்டி உந்தன் முகத்தை

வெறித்து நின்று பார்க்கும்-

செல்ல நாயென்றே வந்து சேர்ந்தேன்

நன்றி மட்டும் அன்றி

பாசம் கொஞ்சம் கலந்து

வெள்ளை மனம் கொண்ட-

செல்ல நாயென்றே வந்து சேர்ந்தேன்

போ என்றே உரைத்தாய் - ஓர்நாள்

போகின்றேன் என்றால் - நீயும்

தனிமையில் நோகத்தான் நேரும் - என

போகாமல் நிற்கிறேன் போ - அட

நாயென்றே நானும் உன்னால்

போ என்றே கற்றேன் போ

நானுரைத்த முதல் மொழியும்

வெறும் 'போ' என்றே போய் முடிய

போய்க்கொண்டே இருக்கிறேன் - நெஞ்சம்

செல்ல நாயென்றே வந்து சேரும் !