Friday, August 21, 2009

சிறு குடைதனில் இரு உயிர்கள்தான்

சற்று நனைந்தாய் நனையாமல்

உயிர் தேடிடும் உனதாசைகள்

கொஞ்சம் நடந்ததாய் நடவாமல்

எனை தேடியே விரல் தீண்டையில்

மிச்சம் உணர்ந்ததாய் உணராமல்

தினம் பேசிய சில வார்த்தைகள்

இன்னும் புரிந்ததாய் புரியாமல்

கரம் சேர்கையில் உன்னை சேர்ந்ததாய்

மனம் துடிப்பதாய் துடிக்காமல்

பனி தீண்டையில் இவள் சூரியன்

மெல்ல உறைந்ததாய் உறையாமல்

உனை பார்த்தால் விழி கொண்டது

நிதம் போதுமாய் போதாமல்

உடன் நின்றது உடன் சென்றது

என வாழ்வதாய் வாழாமல் !