Thursday, October 8, 2009

சிட்டு குருவி

பூட்டிய வீட்டில் கதவினின் நடுவில்
புதியதாய் பார்த்த தன்னை போல்
தனித்த சின்னஞ்சிறு குருவி

நிதம் நிதம் பறந்தேன் செல்லமாய் பார்த்தேன்
தனிமையாய் இருந்தேன் துணையே நீதான்
என்றெல்லாம் பேசிய வண்ணக் குருவி

சொல்வதை சொல்வாள் செய்வதை செய்வாள்
வருவதை என்னை விளிம்பினில் கிடப்பாள்
என்னை போல் இருக்கும் எந்தன் குருவி

சிறையினில் இருந்தாள் துணை எனை பார்த்து
விடுவிக்க வருவாய் என வழிகளில் உரைத்தாள்
என்னை போல் அழுதிடும் சின்ன குருவி

பூட்டிய கதவும் திறந்தது ஒருநாள்
சிறை பட்ட தன்னவள் விடுதலை எண்ணி
வாசலில் நின்றது இந்தக் குருவி

முதல் நாள் வந்து மெதுவாய் பார்த்து
மறுநாள் வந்து பொதுவாய் அழைத்து
மூன்றாம் நாளும் வரவில்லை ஏனோ - என

வேகமாய் உள்ளே நுழைந்து செல்கையில்
சரிந்திருந்த கதவில் தன்னுருவம் கண்டு
வியந்து பார்த்த இந்த குருவி

புரிந்தது உண்மை இது நாள் கதவில்
தன்னை தான் கட்டிடும் கண்ணாடி பிம்பம்
என்பதை உணர்ந்த பேதை குருவி !