Tuesday, November 3, 2009

நினைக்கையிலே நெஞ்சம் உருகிடுமே
வெயிலில் கரையும் பனி போலே

பார்த்திடத்தான் விழி தவித்திடுமே
தரையில் துடிக்கும் மீன் போலே

மனம் கோவிலென நீ கடவுளென நிதம்
தொழுதேன் வாழ்ந்தேன் காதலிலே

உன் நினைவினிலே பித்து பிடிப்பது போல்
உணர்ந்தே ஊடல் தோன்றிடுமே

பகல் இரவு இல்லை பசி தூக்கம் இல்லை
முகிலில் பெருகும் மழை போலே

நிறம் மாறவில்லை நிழல் சேரவில்லை
உன்னிடம் கொண்ட காதலுமே

நிதம் வளர்ந்திடுமே உன்னை வலம் வருமே
வளர்பிறை காலத்து நிலவெனவே
ஒரு சுவடு இல்லை கால் தடமும் இல்லை
நீ மனதில் நுழைந்த நொடி நேரம்
முறையிடவே எண்ணம் தோன்றவில்லை
சுகமாய் நினைவை தாங்கிடுமே
ஒரு காவல் இல்லை புது தடையும் இல்லை
தன் மனம் போல் திரியும் சுனை நீரே !
மனம் கேட்பதில்லை உன்னை மறப்பதில்லை
நிழல் போல் உனையே தொடர்ந்திடுமே !!!