Thursday, December 24, 2009

சாலையோர   மரங்களெல்லாம் - நிழல்
சாய்ந்திருக்கும் நேரம் - நாம்
கைகோர்த்து  கதைபேசி  -நடை
பழகியதை  கூறும் 
கர்வத்துடன்  சேர்ந்து  நிற்கும்
வயற்காட்டு  சோளம் 
நம்மிருவர்  பொருத்தம்  கண்டு 
மணற்பரப்பை  நோக்கும் 
குதிரை  ஏறி  பறந்து  செல்லும் 
கற்பனையின்  கால்கள் 
பொய்க்கால்கள்  வளர்த்துவந்து 
உன் மனவாசல்  ஏறும் 
கானகத்தை  மறந்து  நின்று  நான்
தோல்  சாய்ந்த  நேரம்- என்
கண்முன்னே தோன்றி நிதம்
பரிகசித்தே  போகும்
உன் நேரமில்ல  தருணங்களும்
என் ஊடல் கொண்ட  நினைவுகளும்
பொய்யென்றே தெரிந்திருந்தும்  - அதன்
புதுமையினை  வியந்து
தோற்று  வரும்  தன் மகனை
தேற்றி நின்று  புகழுரைக்கும்
தாய்  மனதின் தன்மையினை 
எனக்குள்ளே  தோற்றும் 
வெகுநாட்கள்  வேண்டி நின்று 
அறிந்து  பெற்று  செல்வம்  - என 
என் அன்பே உனை எண்ணி
மிதமிஞ்சும்  நெஞ்சம் 
இழந்து  நிற்க  துணிவில்லை 
மனமதுவும்  அஞ்சும்  - நீ 
பிரிந்து செல்ல  முயல்கையிலே 
பின் வந்து  கெஞ்சும்